தமிழ்
இப்பாடநெறி தமிழ் கற்பித்தலின் அடிப்படை நோக்கங்கள், குறிக்கோள்கள்,
கற்பித்தல் திறன்கள், அணுகுமுறைகள், முறைகள் மற்றும் நவீன கற்பித்தல்
ஊடகங்களை முழுமையாக அறிமுகப்படுத்துகிறது. மாணவர்-ஆசிரியர்கள்
திறமையான, விழுமியமிக்க மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த
கற்பித்தலை மேற்கொள்ள இப்பாடம் வழிகாட்டுகிறது.
அலகு – 1 : தமிழ் கற்பித்தலின் நோக்கங்களும் குறிக்கோள்களும்
- தமிழ் கற்பித்தலின் அடிப்படை மற்றும்
விழுமங்கள் – ஒழுக்கநெறி, சமுதாயமேன்மை, இறையுணர்வு.
- கற்பித்தலுக்கான நோக்கங்கள் மற்றும்
நடத்தைக்கான நோக்கங்கள்.
- தமிழ் கற்பித்தலின் தேவை மற்றும்
முக்கியத்துவம்.
- புளுமின் வகைமைநெறி – அறிவுக்களம், உணர்தல்
களம், உளஇயக்கசார் களம்.
- திருத்தப்பட்ட புளுமின் வகைமைநெறி (2001 –
ஆண்டர்சன் & கிரத்வால்).
- களங்களுக்கு இடையேயான தொடர்பு மற்றும்
பாடங்களுக்கு இடையேயான தொடர்பு.
அலகு – 2 : கற்பித்தல் திறன்கள்
- நுண்ணிலைக் கற்பித்தல் – பொருள், வரையறை,
படிநிலைகள் மற்றும் சுழற்சி.
- தொடங்குதல் திறன், விளக்குதல் திறன் மற்றும்
வினாக்கேட்டல் திறன்.
- பல்வகைத் தூண்டல் திறன் மற்றும்
வலுவூட்டிகளைப் பயன்படுத்தும் திறன்.
- கரும்பலகையைப் பயன்படுத்தும் திறன் மற்றும்
முடிக்கும் திறன்.
- உற்றுநோக்கல், இணைப்புப்பாடம் மற்றும்
பாடநிகழ்வு.
- நுண்ணிலைக் கற்பித்தலுக்கும் வகுப்பறைக்
கற்பித்தலுக்கும் இடையேயான வேறுபாடு.
அலகு – 3 : கற்பித்தல் அணுகுமுறைகள்
- பாடம் கற்பிப்புத் திட்டத்தின் அணுகுமுறைகள்
மற்றும் அவற்றின் இன்றியமையாமை.
- பாடம் கற்பித்தலின் படிநிலைகள் மற்றும்
கற்பித்தலை ஒழுங்கமைத்தல்.
- நினைவகநிலை – ஹெர்பார்டியன் கற்பித்தல்
மாதிரி.
- புரிதல் நிலை – மோரிசன் கற்பித்தல் மாதிரி.
- பிரதிபலிப்பு நிலை – பிக்கி & ஹண்ட்
கற்பித்தல் மாதிரி.
- பாடம் கற்பிப்புத் திட்டம் மற்றும்
அலகுத்திட்டம் தயாரித்தல்.
அலகு – 4 : கற்பித்தல் முறைகள்
- ஆசிரியர் மையக் கற்பித்தல் – விரிவுரைமுறை.
- பகுத்தறிமுறை, தொகுத்தறிமுறை, விதிவருமுறை
மற்றும் விதிவிலக்கமுறை.
- செயல்விளக்கமுறை.
- மாணவர் மையக் கற்பித்தல் – கருத்தரங்கம்,
பட்டிமன்றம்.
- குழு விவாதம், குழு கற்பித்தல் முறை மற்றும்
இடைவினையாற்றக் கற்றல்.
- கெல்லர் திட்டம், செயல்வழிக்கற்றல் மற்றும்
படைப்பாற்றல் கல்வி.
- மனவரைபடம் மற்றும் கூடுதல் படைப்பாற்றல்
கல்வி.
அலகு – 5 : கற்பித்தல் ஊடகம்
- கற்பித்தல் ஊடகவகைப்பாடு மற்றும் வகுப்பறைப்
பயன்பாடு.
- மின்-கற்றல் மற்றும் விண்ணரங்கம்.
- தகவல் தொடர்பு செயற்கைக்கோள் மற்றும் மொழிப்
பயிற்றாய்வுக்கூடம்.
- செயற்கை நுண்ணறிவு மற்றும் மெய்நிகர் தோற்றம்.
- இணைத்துக் கற்றல், இணைய நூலகம் மற்றும்
இணைப்பு நிஜமாக்கம்.
பரிந்துரைக்கப்பட்ட செயல்பாடுகள்
- தமிழ் மொழி கற்பித்தலின் நோக்கங்கள் குறித்த
கலந்துரையாடல்.
- கற்பித்தல் திறன்களை மேம்படுத்த பயிலரங்குகள்
ஏற்பாடு செய்தல்.
- பல்வேறு அணுகுமுறைகளுக்கேற்ப பாடம்
கற்பிப்புத் திட்டம் தயாரித்தல்.
- கற்பித்தல் முறைகள் குறித்த ஆசிரியர் /
வல்லுநர் கருத்துரை.
- மொழி ஆய்வகங்களில் கற்பித்தல் ஊடகப் பயிற்சி.
Join Us Today!
மொழி, பண்பாடு மற்றும் கல்வி விழுமங்களை ஒருங்கிணைக்கும்
திறமையான தமிழ் ஆசிரியராக உருவெடுக்க
இன்றே சேருங்கள்.